Singers : S. P. Balasubramanyam and Chorus

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Male : Yemalogathil indrae porattam
Ingum aarambamanathu thozhir sangam
Chorus : Yemalogathil indrae porattam
Ingum aarambamanathu thozhir sangam

Male : Naragalogam enum thozhirsaalai
Ini gnyaayittru kizhamai kidaiyadhu

Chorus : Ingulab jindubad….(3)
Puratchi oonguga..(2)

Male : Avasar sattam inimel raththu
Engal thittathil amsangal pathu
Chorus : Avasar sattam inimel raththu
Engal thittathil amsangal pathu
Male : Maasam moondru murai bonasum venum
Varushathil paadhi velai nirutham
Chorus : Nirutham nirutham nirutham nirutham

Male : Boologam enum punniya logathukku
Chorus : Boologam enum punniya logathukku
Male : Inaiyaai naamum por seivom

Male : Yemalogathukku ananchi
Engal kelvi ennachi
Chorus : Yemalogathukku ananchi
Engal kelvi ennachi

Male : Yemalogathil indrae porattam
Ingum aarambamanathu thozhir sangam

Male : Yemanukku yeman vandhaachu

Male : Kombum meesaiyum idhu enna koram
Kingarurukellaam ini uniforam
Chorus : Kombum meesaiyum idhu enna koram
Kingarurukellaam ini uniforam

Male : Iruppadhu vayasinil ottum venum
Chorus : Ottu ottu
Male : Jana naayagam indru malarndhadhu ingae
Chorus : Jana naayagam indru malarndhadhu ingae
Male : Varusham oru yeman vara vendum

Chorus : Yemalogathil indrae porattam
Ingum aarambamanathu thozhir sangam
Yemalogathil indrae porattam
Ingum aarambamanathu thozhir sangam
Naragalogam enum thozhirsaalai
Ini gnyaayittru kizhamai kidaiyadhu

Male : Erumai maattu annaachi
Therdhal vishyam ennachi
Chorus : Erumai maattu annaachi
Therdhal vishyam ennachi
Male : Erumai maattu annaachi
Yemanukku yeman vandhaachu

பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
ஆண் : நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது
குழு : இன்குலாப்..! ஜிந்தாபாத்……! (3)
புரட்சி..! ஓங்குக..!..(2)

ஆண் : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
குழு : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து
எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து
ஆண் : மாசம் மூன்று முறை போனசும் வேணும்
வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம்
குழு : நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம்

ஆண் : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
குழு : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு
ஆண் : இணையாய் நாமும் போர் செய்வோம்…!

ஆண் : எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி
குழு : எமலோகத்துக்கு அண்ணாச்சி
எங்கள் கேள்வி என்னாச்சி

ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்

ஆண் : எமனுக்கு எமன் வந்தாச்சு

ஆண் : கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்
குழு : கொம்பும் மீசையும் இது என்ன கோரம்
கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம்

ஆண் : இருபது வயசினில் ஓட்டும் வேணும்
குழு : ஓட்டு ஓட்டு
ஆண் : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
குழு : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே
ஆண் : வருஷம் ஒரு எமன் வரவேண்டும்…..!

குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
எமலோகத்தில் இன்றே போராட்டம்
இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம்
நரகலோகம் எனும் தொழிற்சாலை
இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது

ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……!
தேர்தல் விஷயம் என்னாச்சி…..!
குழு : எருமை மாட்டு அண்ணாச்சி……!
தேர்தல் விஷயம் என்னாச்சி…..!
ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி……!
எமனுக்கு எமன் வந்தாச்சு……….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here