Singers : Sreekanth Hariharan and Madhura Dhara Talluri

Music by : Veerangan K

Female : Yaen azhagaa ennai kaakka vaithu paarkiraai
Yezhai ival usuroda bhaaram saerkkiraai
Kaathiduven unakkaga nooru senmamae
Kangal rendilae kadalaiyum adakkinaen

Female : Ada kodi kodiyaai kotti koduthaalum
Kodukkaatha en manasa
Nee kedutheyada vayasa
Yetti puduchiyada usura

Female : Un morattu thanamaana paasathulayae
Naanum kooda konjam bayanthaen
Un kirukku thanamana paarvaiyilae
Intha paavi chirukkiyum vizhunthen

Female : Thindadi nikkuraen naanadaa
Un pondaati manasaiyum paaradaa
Ini ennaalum unakku naanadaa

Female : Unnoda meesaiya murukkanum
Un pondaatiyaaga naan merattanum
Konjam adangi odangi nee nadakkanum
Kanji aakki pottalum kudikkanum

Female : Ennaalum ennai thaanganum
Kannaaga un kannaaga

Male : Ammaadi athukulla thovangura
Yemmaadi yemputtu polampura
Ennai kalakku kalakkunu kalakkura
Koththu iduppu saaviyaa kulungura

Male : Unnala aattam kaanuraen
Adi manasil pada padanu vediya sethara vutta
Adiyae azhagu sirukki
En manasa odacha kirukki
Unnai kadaththa venum irukki

Male : En irumbu tholukkula karumba nee vedhacha
Kalava naanum konjam marakka
Chinna kozhantha pola ennai konji thookki putta
Thaaya pola unnai nenaikka
Unnalae aalanen…..

Female : Un mugam thaan
Ennai konji paarka thoonduthae
En mogamo
Maruthani pola sevanthathae

Female : Vetkkam ennavo
En vaazhvil ithu pol illaiyae
Enakkenna thaan
Nadanthatho maranthathae

Female : Anbaala dhenam unnai aalanum
En aasai iravula kooranum
Unnai irukki puduchi thaan uranganum
Mella izhuthu pothi thaan keranganum
Anjaaru pulla yaenthanum
Unnalae en melae

Male : Kannaga dhinam unnai kaakkanum
Un aasai muzhusaiyum sekkanum
Unnai kolantha pola thaan paakkanum
Konji kumari aagaiyil thookkanum
Un moochu kaathil vaazhanum

Male : Kalla chirukki ivan manasa
Adichi thovachi putta
Thuniyaa manasu velukka
Naan pudhusa boomiyil porakka
Un nenappula medhapula nadakka

Male : Un kozhanthai pechikulla
Kozhanthai aagurandi
Azhagi naalum unnai rasichaen
Unnai meratti meesiakulla
Adaikka veeramilla
Potti paambaaga adanjaen
Anbalae un anbalae

Female : Pothumadaa ini enna venum vaazhvilae
Nee arugil un kadhal ondru podhumae
Ondraai koodiye vaanamaai vaazhalaam
Ondraai koodiye vaanamaai vaazhalaam

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லுரி

இசையமைப்பாளர் : வீரங்கன் கே

பெண் : ஏன் அழகா என்னை காக்க வைத்து பார்க்கிறாய்
ஏழை இவள் உசுரோட பாரம் சேர்க்கிறாய்
காத்திடுவேன் உனக்காக நூறு சென்மமே
கண்கள் ரெண்டிலே கடலையும் அடக்கினேன்

பெண் : அட கோடி கோடியாய்
கொட்டி கொடுத்தாலும்
கொடுக்காத என் மனச
நீ கெடுத்தேயடா வயச
எட்டி புடுச்சியடா உசுர

பெண் : உன் மொரட்டு தனமான பாசத்துலையே
நானும் கூட கொஞ்சம் பயந்தேன்
உன் கிறுக்கு தனமான பார்வையிலே
இந்த பாவி சிறுக்கியும் விழுந்தேன்

பெண் : திண்டாடி நிக்குறேன் நானடா
உன் பொண்டாட்டி மனசையும் பாரடா
இனி எந்நாளும் உனக்கு நானடா

பெண் : உன்னோட மீசைய முறுக்கணும்
உன் பொண்டாட்டியாக நான் மெரட்டனும்
கொஞ்சம் அடங்கி ஒடங்கி நீ நடக்கணும்
கஞ்சி ஆக்கி போட்டாலும் குடிக்கணும்

பெண் : எந்நாளும் என்னை தாங்கனும்
கண்ணாக உன் கண்ணாக

ஆண் : அம்மாடி அதுக்குள்ள தொவங்குற
எம்மாடி எம்புட்டு பொலம்புற
என்னை கலக்கு கலக்குன்னு கலக்குற
கொத்து இடுப்பு சாவியா குலுங்குற

ஆண் : உன்னால ஆட்டம் காணுறேன்
அடி மனசில் பட படன்னு வெடிய செதறவுட்ட
அடியே அழகு சிறுக்கி
என் மனச ஒடச்ச கிறுக்கி
உன்ன கடத்த வேணும் இறுக்கி

ஆண் : என் இரும்பு தோலுகுள்ள கரும்ப நீ வெதைச்ச
களவ நானும் கொஞ்சம் மறக்க
சின்ன கொழந்த போல என்னை கொஞ்சி தூக்கிபுட்ட
தாய போல உன்னை நெனைக்க
உன்னாலே ஆளானேன்

பெண் : உன் முகம்தான்
என்னை கொஞ்சி பார்க்க தூண்டுதே
என் மொகமோ
மருதாணி போல செவந்ததே

பெண் : வெட்கம் என்னவோ
என் வாழ்வில் இது போல் இல்லையே
எனக்கென்னதான்
நடந்ததோ மறந்ததே

பெண் : அன்பால தெனம் உன்னை ஆளனும்
என் ஆசை இரவுல கூறனும்
உன்னை இறுக்கி புடிச்சுதான் உறங்கணும்
மெல்ல இழுத்து போத்திதான் கெறங்கணும்
அஞ்சாறு புள்ள ஏந்தணும்
உன்னாலே என் மேலே

ஆண் : கண்ணாக தினம் உன்னை காக்கணும்
உன் ஆசை முழுசையும் சேக்கணும்
உன்னை கொழந்தை போலதான் பாக்கணும்
கொஞ்சி குமரி ஆகையில் தூக்கணும்
உன் மூச்சு காத்தில் வாழனும்

ஆண் : கள்ள சிறுக்கி இவன் மனச
அடிச்சி தொவச்சிபுட்ட
துணியா மனசு வெளுக்க
நான் புதுசா பூமியில் பொறக்க
உன் நெனப்புல மெதப்புல நடக்க

ஆண் : உன் கொழந்த பேச்சிக்குள்ள
கொழந்தை ஆகுறேன்டி
அழகி நாளும் உன்னை ரசிச்சேன்
உன்னை மெரட்டி மீசைக்குள்ள
அடைக்க வீரமில்ல
பொட்டி பாம்பாக அடைஞ்சேன்
அன்பாலே உன் அன்பாலே

பெண் : போதுமடா இனி என்ன வேணும் வாழ்விலே
நீ அருகில் உன் காதல் ஒன்று போதுமே
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்
ஒன்றாய் கூடியே வானமாய் வாழலாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here