Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Male : Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Male : Yen indha vaarthaigal
Yen indha vaasanai
Nenjukkull pei puyal undakutho

Female : Kaadhugal moodum podhinilum
Moolaikul odum paadal ondraai
Ullathai moodi vaithirunthen
Nee mattum eppadi ullae sendraai

Male : En noolum nee aanaai
En vaanam nee aanaai
Kaatraadi aanen adi
Aanen adi

Male : Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Female : Vannam maaradha oviyamaai
Ennai aangaangae kaatugiraai
Eeram kaindhaalum bathiramaai
En bimbam yaavum pootugiraai

Male : Pinnae odidum kaatchiyellaam
Minnal vegathil maatrugiraai
Kannukull ennai ulliluthu
En vaazhvai pulli aakugiraai

Male : Ennai naan kaakka
Varainthiruntha
Maaya kodondrai neekkugiraai
Ithu mei endro poi endro
Yosikkum mun enthan
Aiyaththai pokkugiraai pokkugiraai

Male : Thevai illaatha vetkam ellaam
Neram paarkaamal kollugiren
Naan orr aan endra unmai kandu
Angae ennai naan killugiren

Male : Kaadhal natpukku mathiyilae
Nenjam pendulum aadumadi
Thottum theendaamal pesaiyilae
Vinaadi nindru odumadi

Female : Innum oriru nodigalilae
Mutham nan vaikka koodumada
Ohho en enna kuttaikkul
Un bimbam vaazhathaan
Kal ondrai pottaaiyada

Female : Yen indha paarvaigal
Yen intha mounangal
Nenjukull kaatrinmai undakutho

Female : Yen indha vaarthaigal
Yen indha vaasanai
Nenjukkull pei puyal undakutho

Female : Kaadhugal moodum podhinilum
Moolaikul odum paadal ondraai
Male & Female : Ullathai moodi vaithirunthen
Nee mattum eppadi ullae sendraai

Male & Female : En noolum nee aanaai
En vaanam nee aanaai
Kaatraadi aanen adi (aanen ada)

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண் : ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் : என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

ஆண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த
மாய கோடொன்றை நீக்குகிறாய்
இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் எந்தன்
ஐயத்தை போக்குகிறாய்

ஆண் : தேவை இல்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்
நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்

ஆண் : காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி
தொட்டும் தீண்டாமல் பேசயிலே
வினாடி நின்று ஓடுமடி

பெண் : இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்க கூடுமடா
ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள்
உன் பிம்பம் ஆடத்தான்
கல் ஒன்றை போட்டாய்யடா

பெண் : ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

ஆண் மற்றும் பெண் :
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் மற்றும் பெண் :
என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேன(டி)டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here