Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Yaeru perisaa indha ooru perisaa –
Solladi
Nellu perisaa payaga sollu perisaa

Male : Yaeru perisaa indha ooru perisaa –
Solladi
Nellu perisaa payaga sollu perisaa

Male : Thuninju nirkum vairamulla
Nenju irukku edhukkum
Paninju poga thaevaiyillae
Balam Irukku

Male : Maadirukku veedirukku mannirukku
En manasarinju udhavi seiya ponnirukku
Maadirukku veedirukku mannirukku
En manasarinju udhavi seiya ponnirukku

Male : Yaeru perisaa indha ooru perisaa –
Solladi
Nellu perisaa payaga sollu perisaa

Female : Ponnukkum bhoomikkum
Poruththamundu
Mannai ponnaaga
Ninaikkiradhil arththamundu

Female : Oru nellaith thoovinaa
Nooru nellai kaattuvaa
Oru nellaith thoovinaa
Nooru nellai kaattuvaa
Uyirulla bhoomi maadha..
Avadhaan ulagaththin mudhal maadhaa

Male : Yaeru perisaa indha ooru perisaa –
Solladi
Nellu perisaa payaga sollu perisaa

Male : Neerottam illaiyinaa
Aaerottam nindruvidum
Haaaaa….
Neerottam illaiyinaa
Aaerottam nindruvidum

Male : Aerottam ninnuponnaa
Vayaththukku sorottam
Ennavaagum..
Solladi
Aerottam ninnuponnaa
Vayaththukku sorottam ennavaagum..

Female : Pooththodukkum kaiyaalae
Naaththu nattu vachchaakka
Kaaththu vandhu thaalaattum
Mudivil kadhiru vandhu seeraattum

Male : Aruvadaikku kaaththirukkum
Nellammaa
Nee yaarukkaaga thalai kuninjae
Sollammaa

Male : Paruvam vandha ponnu pola
Achchama
Veetta paakka pora
Aasaiyilae vekkamaa

Female : Nanjaiyammaa petheduththa
Nellammaa
Seerunaalu kalam konduvandha
Ponnammaa
Ooru pagai vandhaalum ennammaa
Naanga unnaalae
Vaazhndhu vittom ponnammaa

Male : Ooru paakka osandhu vittaen
Ulagam paakka osandhu vittaen
Yaar dhayavu thaevai ini sollammaa –
Un aadharavae podhumadi nellammaa

Female : Saavi poga padharu poga
Saththu nellu mothamaaga
Saeththu vaikka naeram vandhaachu –
Ooru paakka
Osandhirukkum kaalam vandhaachu..
Sollunga..
Yaeru perisaa indha ooru perisaa –
Male : Solladi
Nellu perisaa payaga sollu perisaa
Yaeru perisaa indha ooru perisaa aaaa

பாடகர்கள் : டி . எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா

ஆண் : துணிஞ்சு நிக்கும் வைரமுள்ள நெஞ்சிருக்கு
எதுக்கும் பணிஞ்சு போகத் தேவையில்லே பலமிருக்கு

ஆண் : மாடுருக்கு வீடிருக்கு மண்ணுருக்கு என்
மனசறிஞ்சு உதவி செய்ய பொண்ணுருக்கு
மாடுருக்கு வீடிருக்கு மண்ணுருக்கு என்
மனசறிஞ்சு உதவி செய்ய பொண்ணுருக்கு

ஆண் : ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா

பெண் : பொண்ணுக்கும் பூமிக்கும்
பொருத்தமுண்டு மண்ணே
பொண்ணாக நினைக்கிறதில் அர்த்தமுண்டு

பெண் : ஒரு நெல்லைத் தூவினா
நூறு நெல்லைக் காட்டுவா
ஒரு நெல்லைத் தூவினா
நூறு நெல்லைக் காட்டுவா
உயிருள்ள பூமி மாதா அவதான்
உலகத்தின் முதல் மாதா

ஆண் : ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா

ஆண் : நீரோட்டம் இல்லையின்னா
ஏரோட்டம் நின்னுவிடும்
ஹா …ஆஆ
நீரோட்டம் இல்லையின்னா
ஏரோட்டம் நின்னுவிடும்

ஆண் : ஏரோட்டம் நின்னுப்போனா வயித்துக்கு
சோறோட்டம் என்னவாகும் சொல்லடி
ஏரோட்டம் நின்னுப்போனே வயித்துக்கு
சோறோட்டம் என்னவாகும்

பெண் : பூத்தொடுக்கும் கையாலே
நாத்து நட்டு வச்சாச்சு
காத்து வந்து தாலாட்டும்
முடிவில் கதிரு வந்து சீராட்டும்

ஆண் : அறுவடைக்குக் காத்திருக்கும் நெல்லம்மா
நீ யாருக்காக தலை குனிஞ்சே சொல்லம்மா

ஆண் : பருவம் வந்த பொண்ணுப்போலே அச்சம்மா
வீட்டை பாக்கப்போற ஆசையிலே வெக்கமா

பெண் : நஞ்சையம்மா பெத்தெடுத்த நெல்லம்மா சீரு
நாலு கலம் கொண்டு வந்த பொன்னம்மா
ஊரு பகை வந்தாலும் என்னம்மா நாங்க
உன்னாலே வாழ்ந்து விட்டோம் பொன்னம்மா

ஆண் : ஊரு பாக்க ஒசந்து விட்டேன்
உலகம் பாக்க ஒசந்து விட்டேன்
யார் தயவு தேவை இனி சொல்லம்மா உன்
ஆதரவே போதுமடி நெல்லம்மா

பெண் : சாலிப்போக பதருபோக சத்து நெல்லு
மொத்தமாக சேர்த்து வைக்க நேரம் வந்தாச்சு
ஊரு பாக்க ஒசந்து நிக்க
காலம் வந்தாச்சு சொல்லுங்க

பெண் : ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா
ஆண் : சொல்லடி நெல்லு பெரிசா பயக சொல்லு பெரிசா
ஏரு பெரிசா…ஆஆஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here