Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Uyarntha idaththil iruppavan naan
Oivillaamal uzhaippavan naan
Thuyar vanthaalum sirippavan naan
Thodarnthu munnera thudippavan naan

Male : Yaezhaiyin sirippil iraivan
Iruppathai sonnaan thalaivan
Yaezhaiyin sirippil iraivan
Iruppathai sonnaan thalaivan

Male : Annanavan solliya sollai
Annanavan solliya sollai
Naan ennaalum maranthathu illai

Male : Yaezhaiyin sirippil iraivan
Iruppathai sonnaan thalaivan
Annanavan solliya sollai
Naan ennaalum maranthathu illai

Male : Thaayagaththin maanam kaakkum veerarellaam
Mathithu vananga thagunthavaraam
Kozhai polae vaazhpavarai
Pettra thaayum veruppaalaam

Male : Thaayagaththin maanam kaakkum veerarellaam
Mathithu vananga thagunthavaraam
Kozhai polae vaazhpavarai
Pettra thaayum veruppaalaam

Male : Thozhargalae kadamai seithu mudiththa pinnae
Urimai kettu kural kodungal
Thozhil nadaththum seemaangal
Uzhaippuketha porul kodungal
Uzhaippuketha porul kodungal

Male : Yaezhaiyin sirippil iraivan
Iruppathai sonnaan thalaivan
Annanavan solliya sollai
Naan ennaalum maranthathu illai

Chorus : ………………

Male : Vaalipargal mudiyil paathi mugam maraiththaar
Mugaththukirandu thoongal vaiththaar
Moolai valarum kaalaththilae
Mudiyai valarkka paadupattaar

Male : Vaalipargal mudiyil paathi mugam maraiththaar
Mugaththukirandu thoongal vaiththaar
Moolai valarum kaalaththilae
Mudiyai valarkka paadupattaar

Male : Vanjiyargal alungi kulungi nadappatharkku
Aadai lungithaan edharkku
Selai seitha paavamenna
Melai naattu mogamenna

Male : Yaezhaiyin sirippil iraivan
Iruppathai sonnaan thalaivan
Annanavan solliya sollai
Naan ennaalum maranthathu illai

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உயர்ந்த இடத்தில் இருப்பவன் நான்
ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்
துயர் வந்தாலும் சிரிப்பவன் நான்
தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்…..

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்

ஆண் : அண்ணனவன் சொல்லிய சொல்லை
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை

ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்
மதித்து வணங்க தகுந்தவராம்
கோழை போலே வாழ்பவரை
பெற்றத் தாயும் வெறுப்பாளாம்

ஆண் : தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம்
மதித்து வணங்க தகுந்தவராம்
கோழை போலே வாழ்பவரை
பெற்றத் தாயும் வெறுப்பாளாம்

ஆண் : தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே
உரிமை கேட்டு குரல் கொடுங்கள்
தொழில் நடத்தும் சீமான்கள்
உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்
உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை

குழு : ……………………………..

ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்
முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்
மூளை வளரும் காலத்திலே
முடியை வளர்க்க பாடுபட்டார்

ஆண் : வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார்
முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்
மூளை வளரும் காலத்திலே
முடியை வளர்க்க பாடுபட்டார்

ஆண் : வஞ்சியர்கள் அலுங்கி குலுங்கி நடப்பதற்கு
ஆடை லுங்கிதான் எதற்கு
சேலை செய்த பாவமென்ன
மேலை நாட்டு மோகமென்ன…..

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லிய சொல்லை
நான் எந்நாளும் மறந்தது இல்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here