Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female : Aaa…..aaa….aaa…aaa….
Haa….aaa…aa..aaa..aaa…aa.
Haaaaa…aaa…aaa…haaa…aaa…aaa..
Haa….aaa…aaa….aaa….aaa…aaa…

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal
Ezhu swarangalukkul
Ethanai paadal
Idhaya churangathul
Ethanai kelvi

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal
Idhaya churangathul
Ethanai kelvi
Kaanum manidharukkul
Ethanai salanam

Female : Kaanum manidharukkul
Ethanai salanam verum
Karpanai sandhoshathil
Avanadhu gavanam
Karpanai sandhoshathil
Avanadhu gavanam…mmm…
Ezhu swarangalukkul
Ethanai paadal
Haaa…aaa….aaa…aa.a..haaa…aaa…aa….

Female : Kaalai ezhundhavudan
Naalaiya kelvi…eee….eee…ee…
Haaa….aaa….aaa….aaa….aaa….

Female : Kaalai ezhundhavudan
Naalaiya kelvi adhu
Kaiyil kidaitha pinnum
Thudikkudhu aavi
Kaiyil kidaitha pinnum
Thudikkudhu aavi

Female : Yen endra kelvi ondru
Endraikkum thangum
Yen endra kelvi ondru
Endraikkum thangum manidhan
Inbam thunbam edhilum
Kelvidhaan minjum
Inbam thunbam edhilum
Kelvidhaan minjum

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal….lllll….

Female : Enakkaaga nee azhalaam
Iyarkkaiyil nadakkum
Haaa…aaa….aaa…aa.a..haaa…aaa…aa….

Female : Enakkaaga nee azhalaam
Iyarkkaiyil nadakkum
Nee enakkaaga unavu unda
Eppadi nadakkum
Namakkendru boomiyilae
Kadamaigal undu adhil
Namakkaaga nam kaiyaal
Seivadhu nandru
Namakkaaga nam kaiyaal
Seivadhu nandru

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal….

Female : Aarambathin pirappum
Un kaiyil illai…eee…eee…
Haaa…aaa….aaa…aa.a..haaa…aaa…aa….

Female : Aarambathin pirappum
Un kaiyil illai
Endrum aduthadutha nadappum
Un kaiyil illai
Paadhai vagutha pinbu
Bayandhenna laabam
Paadhai vagutha pinbu
Bayandhenna laabam adhil
Payanam nadathividu
Maraindhidum paavam
Payanam nadathividu
Maraindhidum paavam

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal….

Female : Naalai pozhuthu endrum
Namakena vaazhga adhai
Nadatha oruvan undu kovilil kaanga
Naalai pozhuthu endrum
Namakena vaazhga adhai
Nadatha oruvan undu kovilil kaanga

Female : Velai thiruppam endru
Nambikkai kolga…
Velai thiruppam endru
Nambikkai kolga endha
Vedhanaiyum maarum megathai pola
Vedhanaiyum maarum megathai pola

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal
Idhaya churangathul
Ethanai kelvi
Kaanum manidharukkul
Ethanai salanam verum
Karpanai sandhoshathil
Avanadhu gavanam

Female : Ezhu swarangalukkul
Ethanai paadal
Haaa…aaa….aaa…aa.a..haaa…aaa…aa….
Haaa…aaa….aaa…aa.a..haaa…aaa…aa….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹாஆ…….ஆஅ….ஆஅ….ஹா..ஆஅ….ஆஅ…
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ….

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம்

பெண் : காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்…ம்ம்ம்….
ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆ….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஆஅ….ஆ….

பெண் : காலை எழுந்தவுடன்
நாளைய கேள்வி அது
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும்
துடிக்குது ஆவி

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று
என்றைக்கும் தங்கும் மனிதன்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்
இன்பம் துன்பம் எதிலும்
கேள்விதான் மிஞ்சும்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..ல்ல்ல்ல்…..

பெண் : எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…
ஹா….ஆ…ஆஅ….

பெண் : எனக்காக நீ அழலாம்
இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ட
எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே
கடமைகள் உண்டு அதில்
நமக்காக நம் கையால்
செய்வது நன்று
நமக்காக நம் கையால்
செய்வது நன்று

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை….ஈ……ஈ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…
ஹா….ஆ…ஆஅ….

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும்
உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும்
உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு
பயந்தென்ன லாபம் அதில்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்
பயணம் நடத்திவிடு
மறைந்திடும் பாவம்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..

பெண் : நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும்
நமக்கென வாழ்க அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

பெண் : வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று
நம்பிக்கை கொள்க எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள்
எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள்
எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில்
அவனது கவனம்

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள்
எத்தனை பாடல்…..
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…ஹா….ஆ…ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ…ஹா….ஆ…ஆஅ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here